முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
நூற்பயன்19 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

நூற்பயன்

✓
மங்காத புகழ்விளங்க மாண்பு ஓங்க
மணிமகுடத் தனவைசிய நகரத் தார்கள்
சிங்கைநகர்த் தண்டபாணிச் செவ்வேள் கோயில்
சீராகக் கட்டிதிருக் குடநீ ராட்டும்
இங்கிதமாய்ச் செய்தஅன்று வெளியீ டிட்ட
இந்நூலைப் பயின்றுபக்தி செலுத்து வோர்க்கு
மங்கலமாய்ப் பதினாறு பேறும் நல்கி
மயிலூர்தி பாலிப்பான் வாழ்க நீடே!