முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
பொன்8 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

பொன்

6✓
ஆக்கமதை அடியார்க்கே அருள வேண்டி
அயிலவன்தன் உடைமையெலாம் அகற்றி ஆண்டி
பூக்குமொரு பண்டாரப் பொலிவை பூண்டி
பூதிதிகழ் தண்டபாணி! போதத் தோனே!
தேக்கும்பொன் பொருளிலையேல் சிறப்புண் டாமோ?
செல்வமதைத் திறமறிந்து தீமை இன்றி
ஊக்கமுடன் உயர்வாக ஒருங்கு தேட
உற்றஅற நெறிவழியில் உய்ப்பாய் ஐயா!