முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
வாழ்நாள்18 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

வாழ்நாள்

16✓
முற்றறிவு, வரம்பிலின்பம், முடிவே இல்லா
முழுதாற்றல், தன்வயம், பேர் அருளோ(டு) இன்னும்
உற்றஇயல் அறிவென்னும் குணத்தின் சின்னம்
ஓராறு முகமாக உருக்கொன் டோனே!
பற்றறனும் பண்புகளும் படிந்த வாழ்நாள்
பாங்காக அறநெறியில் வாழ்ந்தோர் போலக்
குற்றமிலா நல்வாழ்வு கூட்டும் வாழ்நாள்
குடும்பநலம் நீளாயுள் கொடுப்பாய் ஐயா!