முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு22 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு

✓
மாமயிலே நின்பெருமை நீமதிக்க மாட்டாய்கேள்
தாமறியார் சான்றோர்கள் தம்பெருமை பூமிதனில்
வாழ்வோரில் வானகத்தில் வாழ்வோரிற் பாதலத்தில்
வாழ்வோரி லுன்புகழை வாழ்த்தாரார் - கேழ்கிளரும்
நீலக் கலாபியே நின்றோகை மேல்விரிந்தால்
ஞால முழுதுநிழல் நல்குமே - ஆலித்துன்
தோகை யுதறினதிற் றோன்றுஞ் சுழல்காற்றின்
வேகம் பொறாதிமயம் வேர்பறியும் - மாகமமர்
அண்டங்க ளத்தனையு மாராயி னோற்சிறைக்குள்
அண்டங்கள் போலடக்கு மாற்றலுளை - மண்டலைகொள்
✓
பாந்தளினைப் பற்றிப் பதைக்க உதறியதால்
காந்து மணியின் கணஞ்சிதறிப் - போந்த
நெடுவான நின்றிறங்கின் நீயிறங்கென் றெண்ணிக்
கொடுவாயிற் கொத்துதலுட் கொண்டே - யுடுவாகி
இன்னங்கீழ் வாரா திருக்கின் றனவீசன்
மின்னங்கேழ் வில்லான மேருமலை - தன்னிலவன்
பூட்டுநெடு நாண்டலையைப் பொள்ளெனநீ கொத்தியதால்
பூட்டுவிட நீண்டு பொலியுமால் - ஈட்டுவலி
மிக்கசிறை நீயுதற மேவுவளிக் காற்றறாது
நெக்குரகன் சென்னி நெளிப்பதனைத் - திக்கதிரும்
✓
பூகம்ப மென்று புகல்வார் பரிதிமதி
சோகங் கொளத்தொடர்ந்த சூளரவம் - மாகனக
வாயூற விட்டு வளைபுகுமால் - பாயான
சேடனை நீகொத்திச் சென்றதனால் மாலந்தோ
நாடறிய வாலமளி நண்ணினான் - ஆடல்விடங்
கண்டத்துள் வைத்தருளுங் கண்ணுதலார் செஞ்சடைமேற்
கொண்டத்தா லஞ்சாத கோளரவம் - அண்டத்தே
ஏகுங் கருடற்கண் டேண்டா சுகமாவென்
றாகுங் கருவத் தழைக்குமே - வேகமிகு
✓
தோகையே நீநெடிய தூரம்வரக் கண்டாலும்
போகுமே வெண்டலையின் பொந்தினுளே - மாகருடன்
நின்னாற் புடைப்புண்டு நெக்கழுத காரணத்தால்
அன்னான் கலுழனென லாயினான் - மன்னுமலர்க்
கஞ்சத்தான் ஊர்தியுனைக் கண்டுமிக அஞ்சியதால்
அஞ்சப்பேர் பெற்றதனை யாரறியார் - விஞ்சப்பேர்
பெற்றநின தாற்றலெவர் பேச்சுக் கடங்குமது
நிற்கநின தேர்க்கு நிகருண்டோ - பொற்கலபம்