முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்23 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்

✓
வட்ட வடிவக வளைந்துநீ யாடுங்கால்
கட்டழகுக்குக் குள்ளங் கரையாரார் - இட்டமுடன்
✓
நீல முகிலெழினி நேர்வீழ்த்தி நீடிக்கும்
கோல முளநெகிழ்க்கக் கோவிமையோர் - சாலமலர்க்
கண்மாரி பெய்வதனைக் காசினியோர் தேற்றாது
விண்மாரி யென்றே விளம்புவரால் - கண்ணுதலார்
தாமே நினக்கூப்புத் தாண்டவத்தில் ஈண்டுமெழில்
வாமே கலையார்கள் வாஞ்சித்துத் - தாமேக்கற்
றெத்தனைநாள் கற்றாலு மின்னங்கை வாராமல்
இத்தரையில் மெல்லியரென் றேசுற்றார் - மெத்துசினக்
காளிநட மாடியொரு காலெடுக்க மாட்டாமல்
வாளிமுகந் தாழ்த்தவையில் வைகினாள் - நீளிமயப்
✓
பூம்பாவை நாடறியப் பொன்மன்ற மேறிடினும்
கூம்பாதெம் மானடமே கும்பிட்டுத் - தாம்பார்வை
வாங்காமல் நோக்கியினும் வைகினாந் தானடிக்கப்
பாங்கான வாற்றலினும் பற்றாமல் - பூங்கமலை
எய்யாமல் மாறிப்பல் இல்லந்தோ றாடியுமென்
செய்யா ளெனும்பெயரே சேர்ந்தாளால் ஒய்யாரத்
துன்னைப்போ லாட லுருற்ற முடியாமல்
அன்னத்தைப் போல்வெளுத்தா ளக்கலைமான் - நின்னேர்
நடையே பயின்றும் நடைகூ டாமல்
இடையே யரம்பை யிளைத்தாள் - தொடைவேலோன்
✓
மேலாக நீவிளங்கும் மேம்பாட்டுக் கொப்பாக
மாலாக நாட்காலை மாலைதொறும் - மாலாழி
செங்கதிரை யோங்குந் திரைமேற் சுமந்தியலா
தங்கம்வெதுப் புற்றே யரற்றுமே - பங்கமிலா
மாதையன் மானாருன் சாயல்தாம் வாஞ்சித்தும்
பேதையரென் றெள்ளத்தான் பெற்றாரே - மேதைமிகு