முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
நீபத் தாரோன் கோபப்பிரசாதம்14 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

நீபத் தாரோன் கோபப்பிரசாதம்

✓
புவனங் கடந்தோற் புடைத்துக் - கவலைமிகு
வன்சிறையி லிட்டதூஉ மாமுனிவன் வேள்விவரு
கொன்றகரை யூர்ந்தடக்கிக் கொண்டதூஉம் - பன்றியினைக்
கோட்டை முரித்துக் க்கை முரித்துக் குழகனுக்கன் றீந்ததூஉம்
கேட்டை மிகுகவுஞ்சஞ் செற்றதூஉம் - கோட்டுமத
மாமுகனை மாட்டியதூஉம் வஞ்சிங்கற் கொன்றதூஉம்
தீமைமிகு சூர்மார் சிதைத்ததூஉம் - ஆமிவைபோற்
சேவகங்க ளெல்லாம் தெரிந்தொருபா லேத்திவரத்
தேவர்துயர் தீரவரன் சேயாகி - வாவிதனில்
மாத ரறுவர் மகிழவிளை யாடியதூஉம்
தாதை மனங்குளிரத் தக்கமறை - யோதியதூஉங்
✓
கும்ப முனிக்குக் குருவாக் கருளியதூஉம்
உம்பர் சிறையை ஒழித்ததூஉம் - இம்பர்
மலையிற் சிறைப்பட்ட மாப்புலவன் பாட்டிற்
குலையின் மெழுகா யுருகிக் - கொலைகருதும்
பூதத்தைக் கொன்று புலவனுயிர் காத்ததூஉம்
மாதத்தம் வெட்ட வளர்த்ததூஉம் - மேதக்க
கோழியினைப் பாடும்வாய் குஞ்சினைப்பா டாதென்று
பாழிமொழி சொன்னபெரும் பாவலன்வாய்க் - கேழில்வெண்
முட்டைக்கும் பாட்டு மொழிவித்தாட் கொண்டதூஉம்
சிட்டர் புகழுருணைத் தேசிகனை - மட்டற்ற
✓
பேரருளா லாண்டு பிணிநீக்கி யின்பளித்துத்
தாரணியோ ருய்யவெனத் தன்புகழை - ஈரநறுந்
தேன்மாரி யுண்ணத் தெவிட்டாத புத்தமுது
போன்மாறி லாதுபுகல் வித்ததூஉம் - வான்மாரி
போல வரையாது போற்றுவார் யாவர்க்குஞ்
சால வருள்வழங்குந் தன்மையெலாம் - ஏல
எடுத்திசைத்துள் ளன்போ டொருபாலா ரேத்த
வடுத்தவரை யாதரிப்பான் வந்தான் - கடுக்கவின்ற
கண்டன் றிருமகனாங் கந்தன்வந் தான்மூவர்
அண்டர் முதல்வனா வான்வந்தான் - கொண்டல்வண்ணன்
✓
சிந்தைக் கினிய திருமருகன் வந்தான்போர்
விந்தைக் கினிய விடலைவந்தான் - முந்துஞ்
சிவஞான பண்டிதனாம் செக்கர்வேள் வந்தான்
பவரோக நீக்குபவன் வந்தான் - தவறாமல்
இம்மையிலே முத்திநல மீந்தருள்வோன் வந்தானென்
சும்மைமிகு சின்னங்கள் சொல்லெடுப்ப - நல்லதவ
ஞானமுனி வோர்அமரர் நானிலத்தோ ரேனையரும்
வானமதி கண்டவலை வாரிதிபோல் - ஆனபே
ரானந்த வெள்ள மலைவீசி ஆர்ப்பெடுப்ப
ஆனந்த மாம்பழனி யாண்டவன் - ஆனந்த