முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்4 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்

✓
முடியுடைய வேந்தரொரு மூவரினு முன்னாம்
தொடியுடைய தோட்சேரர்-தோன்றல் - கடிபொழில்சூழ்
தில்லைச்சிற் றம்பலத்துள் தேவர்பிரான் காற்சிலம்பின்
மல்லலொளி யார்ந்துமகிழ் வார்செவியான் - தொல்லுயிர்கள்
✓
உள்ளங் கழறியவை யுள்ளபடி நன்குணர்ந்து
தெள்ளிமனு நீதிசெயுஞ் செங்கோலான் - வள்ளல்
முதலைவாய்ப் பாலனுயிர் மீட்டமுனைப் பாடி
முதலைவாய்ப் பண்பாக்கி மூவா - முதலார்வாழ்
அண்ணற் கயிலைக்கவ் வாளூர ரோடாடற்
பண்ணற் பரிமேற் படர்ந்துசுவை - உண்ணமுதல்
தெய்வவுலா வோதுபுகழ்ச் சேர னணிகொங்கில்
நய்தலிலா வைகாவூர் நாடதனில் - சய்யம்வளர்
மாதிவ ராக மலைவில்லி வாழ்நெடிய
ஆதிவ் ராகமலைக் கண்ணிதாய்ச் - சோதிமிக
✓
வோங்குபசும் பொற்கிண்ண மொத்தமலர் மெத்தமலர்
கோங்குவனம் பச்சைக் கொடியுமையாள் - பாங்கிலுறை
தாவிளஞ்சே வேறி தனைநோக்கி நோற்றநறுங்
கூவிளஞ்சேர் தண்காடு கொண்டல்வண்ணன் - மேவியெனத்
தண்டுளவத் தார்மார்பிற் றாங்குகவென் றோங்குமவாக்
கொண்டுதிரு நோற்ற குளிர்பொழிலும் - அண்டருண
நல்லினிய வுண்டிவகை நல்குமெழிற் றேனுவுடன்
எல்லியவுள் நோற்றசுவை யேற்றமிகு - நெல்லிவளர்
சோலைநிறை சூழ்ந்திலங்கு தொன்னகரம் செந்நெல்சுவை
ஆலைநிறை யோங்கு மணிவயலும் - நீலநிறப்
✓
பட்டுக் குடைகள் பலவுநிறுத் தாலொத்த
மட்டுப்பூம் பாளை மலிகமுகும் - நெட்டைமடற்
பொன்னங் குடம்பொதிந்தாற் போலமுதிர் நெற்றிளநீர்த்
தென்னம் பொழிலும் சினவேழத் - தின்கைமுகம்
காட்டுங் குலைக்கதலிக் காடும்தே மாம்பொழில்கள்
கூட்டங்கொண் டோங்குங் குராமருத - மீட்டளிகள்
பாடுஞ் செருந்திமகிழ் பாதிரிக டம்புவழை
தாடிமங் கூதாளம் தண்காயா - ஏடவிழுங்
கொன்றை குருந்தங் குருக்கத்தி சண்பகம்
மன்றல் மலிமவ்வல் மல்லிகை - துன்று
✓
மருக்கொழுந்து பச்சை மலியவளர் பூங்காத்
திருக்கிளருந் தாமரைசேர் தெண்ணீர்ப் - பெருக்குமலி
வாவிகளு நாற்றிசையு மல்கிமணி மாடங்கள்
தூவியனஞ் சேக்கும்பல் சூளிகைகள் - நீவியணி
✓
மாதரெழில் மைந்தர் மகிழு நிலாமுற்றம்
சோதிமணி மாடநிறை தொன்னகராம் - கோதில்
திருவாவி னன்குடியே செவ்வேட் பிரானுக்
கொருவா வுவகையுட னுற்ற - திருநகரென்
றான்றோர் பலரு மறையக்கேட் டேனுளத்தில்
தோன்றாத பேருவகை தோன்றியதால் - ஆன்றபிறப்
✓
பெண்ணிலவை தம்மி லியற்றுந் தவப்பயனு
நண்ணியதா லூக்க நனியுந்தத் - திண்ணியபே
ராவலொடு மப்பதியை யண்ணினேன் முன்செய்த
தீவினைகள் தீர்ந்தவெனத் தேறினேன் - ஆவிக்
கிரவணமா மாசையொழித் தீடிலொளி யீயுஞ்
சரவணமாப் பொய்கைதனைச் சார்ந்து - பரவுந்தண்
பூம்புனலிற் றோய்ந்துவெண் பூதியணிந் தாறெழுத்துந்
தோம்பறியச் சிந்தித்துச் சுத்தியொடும் - பூம்புகர்சேர்
துங்கக் கரிமுகத்துத் தூமணியைத் தாள்பணிந்து
சங்கத் தமிழ்வளர்த்த சண்முகனை - யெங்குருவாம்
✓
நீதானே கோதேது நேராத தீங்கனியாம்
வாதாநே ரிற்பவள வாய்முத்தென் - றோதும்
மருவாவி நன்குடிகொள் மாதேவன் சேயைத்
திருவாவி னன்குடியிற் சேவித் - துருகுமுளம்
சூழ்வந்து கும்பிட்டுத் தோத்திரித்துப் பேரின்பம்
மூழ்கி விடைபெற்று முன்னெமது - தாழ்குடியைக்