முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்5 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்

✓
கொத்தடிமை கொண்ட குருசாது நந்தியமர்
வித்தகமே லோங்குமட மேவினேன் - நித்த
நிகமாக மாதிகலை நேர்மையுட னாய்ந்து
சகமாயை விட்டொழிந்து சார்ந்தார்க் - கிகபரங்கள்
✓
என்று மழியாத வின்ப முடனருள்வ
பொன்ற லிலாதசிவன் பொன்னடியே - யென்று
துணிந்து சரியை கிரியைசெய் தொண்டர்
உணர்ந்த சிவயோகர் உண்மை - மணந்தசிவ
ஞானியர்கள் மோனியர்கள் நாதாந்தர் - போதாந்தர்
மேனிலைய சித்தாந்தர் வேதாந்தர் - ஏனையவாம்
✓
பல்வகைய கொள்கையரும் பண்போ டுறவாகி
நல்வகைய நூற்பொருளை நாடுநரும் - கல்கனியத்
தேவார மாதித் திருமுறைக ளன்போடு
நாவாரப் பாடுநரும் நம்மருணைப் - பாவாண
✓
னோதுந் திருப்புகழ்த் தேன் ஓங்கு மிசைவகுப்பு
யாதுந் தருவோ னலங்காரம் - நாதன்
அநுபூதி யாதி யருந்தமிழ்ப்பா வோதி
மனுபூதி பெற்று மகிழ்வோர் - கனிவாய்
வடமொழியில் மார்க்கண்டன் மன்னுமுப மன்னு
திடமன்னு புட்பதந்தன் சீர்த்த - சடைமுனிவர்
ஏத்தும் புகழ்த்துதிக ளின்னிசையிற் பாடுநரும்
கூத்த னடியார் குழாங்கள்தமக் - கார்த்தவென
ஆறுசுவை நாலுவகை யுண்டி யடுவாரும்
வீறுவீ றுண்ண விளம்புநரும் - வேறுபல
✓
கைத்தொண் டியற்றல் கடனாகக் கொண்டவரும்
சித்தமகிழ் வோடிருந்து சேவிப்பப் - பத்தர்தமக்
கேதுகுறை வும்வாரா தின்னருளால் வீற்றிருக்கும்
சாதுகுரு நாதன்மலர்த் தாள்வணங்கிப் - போதம்
பெருகு கடைக்கண்ணருள் பெற்று மகிழ்ந்தே
திருவனுஞை பெற்றபின் செங்கை - யொருகால்