முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
பணிபவர்க் கருள லணிமயிலியல்பு25 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

பணிபவர்க் கருள லணிமயிலியல்பு

✓
பரிந்தளித்தல் நின்னுடைய பண்பன்றோ வேந்தன்
தெரிந்தசபை முன்னருணைச் செம்மல் - வருந்தலறத்
தேவர் பெருமானைச் செவ்வியுறக் கொண்டுவந்து
தாவில் புகழ்படைத்த தாளாள - ஆவலினால்
✓
கொண்டுவா விங்கு குமாரகம் பீரனையென்
றண்டமிழ்கேட் டவ்வண்ணம் சாதித்துக் - கண்டெரியா
முத்து வயிரவன்றன் முன்காட்சி தந்தருளும்
சத்தி படைத்தவனீ தானன்றோ - அத்தனுன்
மாற்றந் தனைத்தள்ள மாட்டானீ தீயவர்க்கும்
தேற்ற மினிய சிகாவளமே - ஆற்றவும்
தானே தயவுடைய சண்முகன்பாற் காலத்துன்
போனேயர் என்குறையைப் போய்ப்புகன்றால் - நானேயம்
வைத்தளியே னென்று மறுப்பானோ தொண்டர்தமைத்
தத்தளிக்க விட்டுச் சகிப்பானோ - மெத்துசின்
✓
மாயைதன் சேய்க்குந்தன் மாட்சியுருக் காட்டியவன்
நேயருக்குத் தன்காட்சி நேரானோ - மாயைக்
கொடுமை களையவல கொற்றவனென் பாசக்
கொடுமை களையவருள் கூர்வான் - நெடுமொழிசொற்
றேசும் புலவர்பா லின்னலுறுத் தன்னவர்தம்
மாசில்கவி பெற்றருளும் வண்மையான் - கூசுமுளத்
தன்போ டியான்புனைய லானதமிழ் மாலையையும்
இன்போடு தன்றோளி லேலானோ - முன்பு
குழறிக் குழறிக் குமரனைப்பா டென்னும்
பழமொழியுங் காயாகற் பாற்றோ - குழகனினித்
✓
தள்ளா தெளியனையுந் தாங்குவான் நீகுறிப்பின்
கொள்ளே னிதிலையங் கோன்முன்னர்த் - தெள்ளும்
உருவகதா ளத்தினி யாடி யருகி
உருவகத்தி லுன்ன லுணர்வான் - பெருமான்முன்
ஆதியெனுந் தாளத்தி லாடினா லின்றுணைநீ
யாதியென வேண்டு மதையறிவான் - தீதிலாச்
சம்பையினி லாடிற் சனனப்பை மேவுமொரு
வம்பைத் தவிர்க்கும் வழியருள்வான் - நம்பும்
திரிபுடையி லாடிற் றிரிபுடைய மாயைத்
திரிபுடையச் சீரருள்கள் செய்வான் - திரிவின்றி
✓
மட்டிமத்தி லாடினால் மட்டிமையை நீக்கியருட்
சிட்டர் குழுநடுவே சேர்ந்திடுவான் - நட்டம்
துருவத்தி லாடினால் றொல்லையினை தீர்த்துப்
பெருநிலையில் வைத்தெம்மைப் பேணிக் - குருவாகி
வந்தருளி வாழ்விப்பன் மாமயிலே நீயுவந்து
சந்தமொடு முந்நடித்துச் சண்முகனை - முந்தி
மகிழ்வித்து நல்லமயம் வாய்த்ததென் குறையைப்
புகழ்வித் தகத்திற் புகன்றால் - துகிரனைய