முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை24 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை

✓
கேகயமே யுன்போலக் கேடில்லா மாதவமெவ்
யோகருக்கு மெய்துவதோ வொண்சுவைய - பாகுமொழி
மாலிமய வெற்பன் மடமயிலு முன்னுருவாய்
ஏலியம மாததவ மீங்கியற்றி - மேலினிய
✓
சங்கரனார் பொங்கினருள் சார்ந்தனன்பின் னும்மவர்தம்
பங்ககலா மேலாம் பதம்பெற்றாள் - பொங்குமலர்ச்
சாகை பரப்பிநெடுந் தண்முகில்தூழ்ந் துன்வடிவ
மாகையொடுன் பேர்படைத்த வாதரவால் - மாகமுயர்
குன்றமெலாங் கோயிலாக் கொண்டான் குமரனுனை
யன்றி யவற்கினியார் யார்மயிலே - குன்றருவி
யார்ப்பப் நடந்தனைய யானை தகர்முதலாய்
போர்ப்பரிகள் பெற்றிருந்தும் புண்ணியன் - காப்பதற்கு
மெய்யன்பர் முன்னர்வரூம் வேளையெலா நின்மேலாக்
கையின்வடி வேலோடும் காட்சிதரும் - செய்ய
✓
மணிநாவில் வேலு மயிலு மெனுஞ்சொற்
கிணையான மந்திரந்தா னேதோ - பணிவோடு
மாமுருகன் பேரை மறந்தாலு முன்பெயரைச்
சேமநினை வார்மறவார் செஞ்சொல்லின் - பாமகிழ்வா
லாடும் பரிவே லணிசேவ லென்றுருகிப்
பாடும் பணியிற் பணிக்கவென - நாடும்
அருணகிரி பாடும் அநுபூதி முன்னர்
வருமகிமை யுன்றனக்கே வாய்த்த - துருவாய்
அருவாய் உளதா யிலதான கந்தன்
குருவாகி வந்து குறைகள் - ஒருவிப்பேர்
✓
அன்பருடன் நல்கிறு வாசைத் தொடரறுத்துப்
பின்பநு பூதி பெறுவித்த - துன்பெயரைக்
காதலுடன் பாடியதோர் காரணமே கேகயமே
ஓதலுள னுன்பெயர்நா னுள்ளுருகி - யாதலினால்
என்குறைக்கு நீயிரங்கி எம்மா னிடந்தூது
சென்றுவரல் வேண்டுமுனைச் சேர்ந்தோரை - என்றும்