முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்27 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்

✓
வாழையடி வாழை எனவாழ் வழியடிமை
ஏழைத் தொழும்ப னிவனொருவன் - மோழமையாற்
குற்றமொரு கோடி குயிற்றிடினு நின்னடிக்குக்
குற்றங் குயிற்றக் குறித்தறியான் - கொற்றவனே
உன்னை யொழிய வொருவரையு நம்புகிலான்
பின்னை யொருவரையும் பின்செல்லான் - உன்னடியார்
பொன்னடிகட் கென்றும் பிழைசெய்யான் அன்னவர்கள்
சொன்ன பணிபுரியச் சோர்வடையான் - முன்னைப்
✓
பரம்பொருளும் பல்லுயிரும் பண்ணும் வினையும்
நிரந்த கதிவகையு நேரார் - அறந்தைதரு
கூட்டத்துட் கால்வையான் கோதில்சரி யாதியிகழ்
ஏட்டைக் குறும்பர்குழு வெய்திடான் - வீட்டினைப்
பொன்னை மனையினைப் பொற்றொடியார் மொய்ம்முயக்கை
அன்னத்தை யாடை யணிகலனை - என்னவெனத்
தேடித் திரிந்து திரட்டித் தொகுத்துவைத்
தீடழியுந் தாம்பிரம மென்றுரைக்கும் - கேடர்மொழி
கொள்ளான் இரண்டொன்று கூறிக்கைக் குத்திடுவார்
நள்ளான் பொய்ஞ் ஞான நயந்திடான் - கள்ளமாய்த்
✓
தன்னை மறைத்த தமமான வாணவமும்
கன்மத் தளையும் கழன்றுபெரும் - வன்மாயைப்
பேயைத் துரத்திப்பின் பேசா வநுபூதி
ஏயப் பெரிதுநசை யெய்தினான் - நீயான
ஞான விநோத நலமே விரும்பினான்
ஊனந் தவிர்த்தாளல் உன்கடன்காண் - தீனர்பால்
ஓங்குங் கருணை யுடையானே அவ்வடியான்
தீங்கெவையு மோர்பொருட்டாச் சிந்தைகொளேல் - ஈங்குவா
என்னடிமை நீயென் றிசைத்தவனை யாட்கொண்டுன்
பொன்னடிகள் சென்னிகூப் பூவாக்கி - முன்னை
✓
வினைமாசு நீக்கியடி மெய்ஞ்ஞான மாக்கி
யெனதியான் எனுஞ்செருக் கின்றி - நினையே
யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிமெய் யின்பம்
புணர்ந்து பிரிவு புணரா - திணங்குமலர்த்
தாடலைபோ லோவாத தத்துவசுத் தாத்துவித
நீடனுப வத்தி னிலைநிறுத்தி - யாடகத்தின்
மாடுமனை மக்கடமின் வாழ்வின் மயங்காமற்
கேடுவினை நல்குரவு கிட்டாமல் - ஏடவிழுங்
கூந்தலினார் காமக் குழயில்வீழ்ந் தாழாமல்
தீந்தமிழ்ப்பா விற்றுத் திரியாமல் - சேந்தநறின
✓
தின்புகழ் நூலன்றி யேனைப்புன் னூலோதிப்
புன்பொழுது போக்காமற் பூசனையு - மன்புமிக
நல்லசெபஞ் சேடியி னாட்டமுத லாயநலம்
வல்லபெற வந்து வுறமருளி - யெல்லையில்பே
ரானந்த வீடு மவனுக் கருள்புரிக
ஆனந்த ரூபமுரு கையனே - ஊனமிலாச்
சித்தேசித் தேயாஞ் சதாசிவமே யென்றுரைத்துச்
சித்தேசன் நல்லருளைச் சேர்ப்பிக்கச் - சித்திரநீள்
தோகைக் குடைவிரித்துத் தோமில் நிழல்பரப்பிப்
பாகுமொழி யன்னையர்கள் பக்கமுற - வாகைபுனை
✓
ஞானவடி வேல்வலக்கை நண்ணமுரு கேசனைப்
பானல்வாய் ஞானம் பரிமளிக்கும் - மோன
பரமகுரு நாதனைப் பண்ணவர்தம் கோவை
வரதனைமெய் யன்பர்தமை வாழ்த்தும் - விரதனை
மாணிக்க வண்ணனை வண்பவளத் தின்றிரளை
ஆணிக் கனகத்தை யாரொளியைப் - பேணுநரைப்
பேணிப் பிறப்பிறப்புப் பேராழி நீக்கியருள்
தோணியை முத்தியினைத் துய்க்கவிடும் ஏணியை
அன்பர்க் கிருநிதியை யாரமுதை யோர்புக்கண்
இன்பக் கரும்பி லெழுஞ்சாற்றைத் - துன்பமற
வேததரு மீது விளையு நறுந்தேனைத்
தீதகலு மெய்ஞ்ஞானத் தீங்கனியைச் - சோதி
யயில்வே லருட்பழனி யாண்டவனை யென்பால்
மயிலே விரைந்தழைத்து வா.