முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு8 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு

✓
சந்தனச்சாந் தின்மணமோ தண்பனிநீர் வாசனையோ
மந்திரமாம் வெண்ணீற்றின் மாமணமோ - பந்தமுறு
மாலைகளின் தூமணமோ மட்டற்ற தேனறுநெய்
ஆலைதரு பூங்கழைச்சா றைந்தமிர்தம் - கோலக்
கலயரிடு குங்கலியம் காரகிலின் றூப
மலையு மணமோ வகுத்துச் - சொலவொண்ணா
தோதுந் திருப்புகழ் தேவார மோங்கிசையோ
கீதங்க ளின்முழக்கோ கேடில்லா - நாதசுர
வாசனையோ கண்டா மணிமுழக்கோ தொண்டர்குழாம்
ஆசி லரஹரவென் னார்ப்பொலியோ - பேசுங்கால்
ஏது பெரிதென் றியம்ப லெளிதன்று
சோதிதிரு வாலயத்துட் தொண்டர்குழாம் - கோதில்
✓
ஒருவர் திருமார்பி லுற்றதிரு வெண்ணீ
றொருவர் முதுகிலுற வீண்டித் - திருமுன்னர்ச்
சேவித்து நிற்கும் திறங்கண் டவர்போலப்
பாவித்து நின்று பரவினேன் கூவுதிறற்
செஞ்சேவ லோங்குகொடிச் செவ்வேற் குமரகுரு
மஞ்சாரு முற்கோல மாற்றியபின் - நெஞ்சார