முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு13 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு

✓
சாமமறை யோதுஞ் சதாசிவவோம் சுப்ரமண்ய
நாமமுட னாயிரநன் னாமத்தான் - ஏமமலை
தன்னைச் சிலையாய்த் தரித்துப் புரமெரித்த
முன்னவன் வைத்த முழுக்கருணை - தன்னால்
திருவுருவாய் நின்ற சிவகிரியா னன்பு
பெருகுளத்திற் றன்கருணை பெட்டப் - பெருகிவரு
✓
விண்முகத்தார் மண்ணோர் வியனகர் மூழ்குபுனற்
சண்முகத்தா றோங்கு தவப்பயன்போல் - மண்ணின்மேல்
வேண்டு நலமீயும் மேன்மைவரத் தாறுடையான்
ஈண்டுபுகழ் நல்லா வினன்குடியான் - மண்டபுகழ்க்
கன்மாப் பலகை கவினுறுமேல் வீற்றிருந்த
பன்மாப் புலவர்சொல் பாமாலை - தன்னோடு
பண்கடப் பின்றிப் பமர வினமுரலுந்
தண்கடப்ப மார்பணிந்த தாரினான் - விண்கடந்து
நாகருல கங்கடந்து நாடிநொடிப் போதில்வருந்
தோகைமயில் வேகத் துரகத்தான் - மாகம்
✓
அளவுங் கயிலை யணிநடைபெற் றென்ன
வளர்மும் மதகரியான் வையம் - தளருமல
ஆரிருளி னீங்கி யருட்சோதி பெற்றுய்யச்
சீரினொடு கூவுகொடிச் சேவலான் - யாரெனினும்
தன்னடைந்தார்க் கின்பங்கள் தந்தருளுங் கந்தனிவன்
முன்னடைவிர் என்றறையு மும்முரசான் - மென்மலர்வாழ்
முந்தை மறையோன் முதலோராற் றோற்றமுதல்
ஐந்தொழிலுஞ் செய்விக்கு மாணையான் - எந்தை
இவனென் றொருசிலர்க ளேத்த வொருபால்.