முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்10 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்

✓
போகநன் கொற்றிப் பொலனா ணரைப்பூட்டி
சாகைமறைக் கோவணமுந் தற்றுமிக - மோகமுறும்
பல்லுயிரை வாட்டும் பகையான மும்மலத்தைக்
கொல்லுதற்குக் கொண்டபோர்க் கோலம்போல் - கல்லாடை
சிற்றிடையிற் சேர்த்துத் திகழுத்த ராசங்கம்
வெற்றியமர் திண்தோளின் மேலணிந்து நெற்றிமுதல்
✓
அங்கமெலாம் வெண்ணீ றளைந்துநுதற் பொன்பொட்டிட்
டங்கண்மணி மாலை யணிந்துநறுந் - தொங்கலும்
இண்டையுங் கண்ணியு மேரார்ந்த வாசிகையும்
கண்டிகையு மேனைக் கலன்களும் - கொண்டணிந்து
தண்டமொரு செங்கைமலர்த் தாங்கிச்சூர் வேரையறுத்
தண்டர்குடி காத்தமுனை யாரயிலைத் - திண்டோளிற்
சேர்த்தருளி யோர்கை திருவரையில் வைத்தெம்மை
ஆர்த்தபிறப் போடிறப்பும் அன்றயனார் - கூர்த்தெமது
புன்றலையின் மேலெழுதும் பொல்லா எழுத்தினையும்
ஒன்றவழி நோன்புதிரல் உற்றடியார் - நன்றறிந்த
✓
சித்தத்தும் வேத சிரத்தும் அருணகிரி
யத்தன் புகழ்பாட் டடிதோறும் - நித்தனுமை
கண்ணகத்தும் விட்டகலாக் காமர் திருவடியில்
வண்ணச் சிலம்பும் வனைந்தெதிரில் - நண்ணு