முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்7 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்

✓
மருவியென ஞானமத மார்த்திழியுஞ் சோதிக்
கரிமுகவொற் றைக்கொம்பர்க் கண்டு - திருவடியில்
தெண்டனிட்டுக் குட்டிட்டுத் தொப்பணமிட் டுச்சிரசிற்
கொண்டுகரங் கும்பிட்டுக் கோதில்பல - தொண்டர்குழு
மொட்டையிட்டு மேனி முழுதுந்தூ நீறணிந்து
சிட்டமுடன் காவடிதோட் சேர்த்தியியங் - கொட்ட
உருகா தரத்தா லுடல்புளக மெய்தி
முருகா முருகா முருகா - அருள்பொழியும்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் யாவரினும்
வீறுசிவ சுப்பிரமண்ய வேலவா - தேறுமவர்
✓
அஞ்சுதலை நீக்கியுளத் தாறுதலை யீயவென
மஞ்சுதலை சூழ்பழனி மாமலைவாழ் - விஞ்சுபுகழ்
ஆண்டவா வோமரஹ ராவென்று வான்பரவ
நீண்டபே ரோசை நிகழ்த்திடவும் - ஈண்டுசிலர்
தங்கள் வறுமைச் சலதி கடத்தினதும்
பொங்கு துயர்நோயைப் போக்கியதும் - மங்கலஞ்சேர்
இல்லாட் புணர்த்தியது மின்மகவை ஈந்ததுவும்
பொல்லா எதிரிகளைப் போக்கியதும் - நல்ல
கலைஞானங் கைகூடக் காட்டியதுஞ் சிந்தை
யலையாத நிட்டை யளித்துத் - தொலையாத
✓
பேரின்ப மூட்டியதும் பின்னும் பலபலவாம்
சீரருள்கள் பேசியன்பாற் செல்வாரும் பாரின்கண்
எண்ணரிய கேத்திரங்க ளெத்தனையோ மூர்த்தங்கள்
புண்ணியநற் றீர்த்தம் பொருந்திடினும் - உண்மையினில்
தென்பழனி மாமலைக்கும் தெண்டா யுதக்குழகும்
நன்புனல்சேர் ஷண்முகப்பேர் நன்னதிக்கும் - பன்னிடவோர்
ஒப்பில்லை யில்லையென வோதிப் புகழ்வாரும்
கப்பூரந் தேங்காய் கதலிபலம் - திப்பியம்ஆம்
பஞ்சாமிர் தங்கூட்டுப் பண்டங்கள் ஆனைந்து
விஞ்சுமுழக் காட்டவுள வேறுபொருள் - நெஞ்சினில்முன்
நேர்ந்த கடன்கள் நிரைநிரையாய்க் கொண்டுசெல்வோர்
ஆர்ந்தபதி னெண்டேயத் தன்பர்குழாம் - சேர்ந்துநிறைந்
தெண்ணு ளடங்காதார் ஏறிமலை மீதுசெலக்
கண்ணு மனமுங் களிகூர - நண்ணி
இடும்பன் றிருமுன்னின் றேத்தியருள் பெற்று
நடந்து மலையுச்சி நண்ணி - இடம்பரவு
கோயில்வலம் வந்து கொடிமரமுன் றண்டனிட்டு
வாயில் நுழைந்தேன் மகிழ்வோடும் - ஆயிடைச்செஞ்