முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்17 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்

✓
அத்த னவனருளே அல்லும் பகலுநினைத்
தித்தரையோர் பித்த னெனவிருந்தேன் - சித்தம்
ஒருங்கப் பெறுகிலேன் உள்ளேயென் னாதன்
அருங்கமலச் சேவடிகண் டன்பின் - வரும்பெரிய
✓
இன்பப் பெருக்கி னிடைதோயேன் மாயைசெயும்
துன்பப் பெருக்கிற் சுழல்கின்றேன் - முன்பு
மகமாயை நீக்குவதில் வல்லபிரான் றிங்கள்
முகமாறு மோதியுமேன் மோன - சுகமின்னும்
வந்தபா டில்லை வலிய வினைமிடுக்குச்
சிந்தியபா டில்லையுளந் தேறவிலை - அந்தகனை
வென்றகெடு வஞ்ச விழிமாத ராசைவலை
நின்று குதிக்கவிலை யாடுகொடி-வீடுவய
--------------------
லாசைப்பை சாச மகலவிலை - நீசர்தமைப்
✓
பின்செய்கை வேண்டுபெரும் பீழை யொழியவிலை
என்னதியா னென்செருக்கு மேகவிலை - பின்னல்படு
பன்னூலிற் சிக்குப் படுமதியுந் தேறவிலை
அன்னோ இதுவோநான் ஆவதுதான் - வென்வேலோன்
சேவடியி னன்பரையுந் தீவினைகள் சேருமெனில்
யாவரினி யுய்குநர்க ளெம்பெருமான் - பாவியுளம்
வாரா திருந்திடவும் வந்து கருணைக்கண்
பாரா திருந்திடவும் பாதமலர் - சீராக
என்புன் றலைமே லிருத்தா திருந்திடவும்
வன்பின் பெரிய வழக்குண்டோ - முன்பரனார்
✓
ஓங்கு குளமுளரிக் கண்ணுதித்தான் நீள்கவலை
யோங்கு குளமுளரிக் கண்ணுதியான் - வீங்குபுனற்
கங்கைக்குங் காதன்மை கண்ணினான் நாயேன்
கங்கைக்குங் காதன்மை கண்ணிலான் - அங்கமலப்
பொய்கை பொறுக்கப் பொருந்தியிருந் தானடியேன்
பொய்கை பொறுக்கப் பொருநதிடான் - மைகைசூழ்
வன்னகமேன் மேக்கோயில் மன்னினா னென்னகமாம்
வன்னகமேன் கோயிலா மன்னிலனோ - அன்னன
வளைக்குளாய்க் கந்த வடிவானான் நெஞ்ச
வளைகுளாய்க் கந்தாகி வாரான் - துளக்கமறச்
✓
சொப்பனத்தி லிந்திரன்றன் சேய்க்குறுதி சொல்லினான்
சொப்பனத்தி லும்எனக்கேன் சொல்லிலான் - ஒப்பறுதன்
தந்தைக் குவகை தழைக்கவொரு சொற்றந்தான்
சிந்தைக் குவகையென்பாற் செப்பிலான் - முந்தை
யலையாழி வற்ற வயில்விடுத்தா னுட்க
வலையாழி வற்றவுளம் வையான் - மலையதனை
நெஞ்சம் பிளந்துசிறை நீக்கினா னென்வினையின்
வஞ்சம் பிளந்துசிறை மாற்றிலான் - தஞ்சம்
அடைந்தேனுக் கென்னே அருளா திருந்தான்
உடைந்தே னுளம்கவலை யுற்றேன் - மிடைந்தெதிர்ந்த