முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
கலபமயிலின் பலபெயர்ப் பெருமை19 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

கலபமயிலின் பலபெயர்ப் பெருமை

✓
மாதர்நடை கற்ற மயூரமே - சீதவளம்
மிக்கமுகில் கண்டுவகை மேவித் தழைபரப்பிப்
பக்கமவிர் செக்கர்பொன் பச்சைமுதல் - மிக்கநிறம்
ஓங்கி யொளிவீச வொண்வா னகந்தழுவி
ஓங்குமரன் மேலிருக்க வுற்றழகு - தாங்கும்
நவிரமே நெய்யுந் நறும்புவு மின்றி
தவிரா தழகுதழை கூந்த - லவிருஞ்
சிகாவளமே யாண்மை சிதையாச் சிகண்டீ
சுகாரம்ப மாமினிய தோகாய் - ஓகரமே
✓
சேர்ந்தாரைக் கொல்லாது தீப்புகையு மேவாது
சார்ந்தாரைக் காத்தளிக்கும் தண்சிகியே - வார்ந்தவிசை
யின்னரம்புக் கட்டி லியையாமற் பேரன்பர்
கின்னமுள தீர்த்தருளுங் கேதாரம் - வென்வேலின்
மின்னலெழச் சேவல் மிடற்றி னொலிமுழங்க
மன்னிய வானத்து வந்துநிறைந் - தின்னருளைக்
கந்தனெனு நன்மேகங் காலத்திற் பெய்வதனால்
பந்தமிகு பல்லுயிராம் பைங்கூழ்கள் - சந்ததமும்
கேடின்றி யோங்கச்செய் கேதார மேயெளியேன்
நாடும் பெருந்துணையே நாயகமே - வாடும்பன்