முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
காப்பு1 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

காப்பு

விநாயகர்✓
அளிபயிலுந் தென்பழனி யாண்டவனை வேண்டிக்
களிமயில்சேர் தூதுக்குக் காப்பாம்-தெளிநறுந்தேன்
தேங்குஞ் சரத்தாமச் செஞ்சடைமுக் கட்கருணை
ஓங்குஞ் சரத்தா னுவந்து.
சற்குருநாதர் வணக்கம்✓
தஞ்சமென வஞ்சலெனுஞ் சாதுகுரு நாதனிரு
செஞ்சரண நெஞ்சதனில் சேர்தலினால்-விஞ்சும்
அயில்விடலை தென்பழனி யாண்டவன்பா லன்பாய்
மயில்விடுதூ தாகு மகிழ்ந்து.
வித்யாகுரு துதி✓
கந்தச் சுவாமி கருணா கரச்சாமி
சந்தச் சுவாமிதமப் பச்சாமி-மந்தத்
துயில்விடு மாறருளுந் தூயகழல் போற்ற
மயில்விடு தூது வரும்.