முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
நூல் - கலிவெண்பா2 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

நூல் - கலிவெண்பா

சுப்பிரமணியன் ஒப்பறு பெருமை✓
பூமேவு மாது புணரும் புயல்வண்ணு
நாமேவு மாதுபுணர் நாயகனும் - கோமேவும்
யாக்கைத்தே வேந்திரனும் இன்னிசைய நான்மறையும்
ஆக்கத்தே வாதியர்கள் யாவர்களும் - நோக்கி
யறிதற் கரிய வநாதியா யாதோர்
குறியுங் குணமுமிலாக் கோமான் - நெறியால்
அறிவை யறியு மறிவ ரகத்துட்
செறியும் பரம சிவமாய் - அறியும்
அறிவி னறிவாகி யவ்வறிவி லூறும்
பிறிவருபே ரின்பப் பெருக்காய் - தெருழுமல
✓
நோய்நீங்கி யாருயிர்கள் நோன்மையுற நோன்றெடுத்த
தாய்போல வைத்த தயாவினால் - ஏயும்
உருவு மருவு முருவுருவு மாகப்
பருவ வடிவங்கொள் பண்பான் - மருவு
முலகுயிர்கள் யாவுமாய் வேறா யுடனாய்க்
கலவிக் கலவாத காட்சி - யிலகும்
அவனருளால் அல்லாமல் ஆர்க்கு மெவைக்கு
மிவனின்ன னென்னவொண்ணா ஏந்தல் - நவையறுமா
றெப்பிரமா ணத்தாலு மெச்சமய மும்பரவு
சுப்பிரமண் யப்பெயர்சேர் தொன்மையான் - எப்போதும்
✓
ஏசுத லில்லாப் பிரமம்இது வென்றுமறை
பேசுஞ் சிவசுப் பிரமணியன் - தேசமெலாம்
ஆக்கி அளித்தழிக்கு மாற்றலவர் போற்றுபுகழ்
தூக்குஞ் சதாசிவரோஞ் சுப்ரமண்யன் - ஆக்காத
ஆக்கை யிளமை யழியாத் தெய்வமணம்
பூக்கும் அழியாப் புகழ்முருகன் - தேக்கரும்பர்
எண்ணா யிரங்கோடி யீண்டிடினுங் காலழகு
நண்ணா வெழின்மிகுந்த நன்முருகன் - எண்ணாமல்
ஓங்காரத் தின்பொருளை யோதாத வேதாவைத்
தாங்காச் சிறைவைத்த தாடாளன் - பூங்காலிற்
✓
றெண்டனிடு தந்தைக்குச் செம்பொருளைச் செப்பியாட்
கொண்ட பரம குருசாமி - விண்டுவையோர்
கையாற் குறுக்குங் கலசமுனிக் கின்னருளைப்
பொய்யா தளித்த புகழ்ச்சாமி - வையமெலாம்
தன்னுடைமை யாகத் தனையுடையார் வேறில்லாக்
கொன்னுடைய சாமி குகசாமி - முன்னர்வதன்
வெந்ததுநன் றென்றுள் வியக்கவவற் குற்சிதஞ்செய்
அந்த மிகுங்குமர னாஞ்சாமி - பந்தமலக்
குற்சிதங்கள் போக்குங் குமரபர மேசனுயிர்
நற்குகையில் மேயுகக நாயகன் - சிற்பொருள்கள்
அத்தனைக்குந் தம்பெருமா னாளுஞ்சே னாபதிபேர்
எத்தனையோ கோடி இசையியவுள் - பத்தித்