முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்3 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்

✓
தரங்குன்ற லில்லார்க்குச் சன்மவிடாய் தீர்க்கும்
பரங்குன் றொடுஞ்செம் பவளம் - தரளமொடு
நந்தூ ரலைவாயில் நண்ணி முழங்குதிருச்
செந்தூ ரலைவாயுஞ் சித்தர்குழாம் - வந்தித்
தொருவாவி னங்குடிலி லுய்க்காது காவென்
திருவாவி னன்குடியும் தெய்வத் - திருமறையோர்
நீரகத்தா லாறெழுத்து நெஞ்சழுத்தி யஞ்சலிசெய்
ஏரகமும் பூம்புனந்தோ றேனல்விளை - நீரருவி
✓
முன்றிறொறு மோடி யொளிர் முத்திறைக்குந் தண்சாரற்
குன்றுதொறுங் குனிறைந்து கொண்டலினம் - துன்றி
முழமுதிரு மோசை முழங்கமயி லாடும்
பழமுதிருஞ் சோலையும் பல்சீர் - விழவுமலி
நன்னகரம் இன்னும் பலவு நயந்திருந்து
மன்னுயிர்கட் கின்பம் வழங்குநினு - மின்னும்