முருகன் App
பழநியாண்டவர் மயில்விடுதூது
கு. நடேச கவுண்டர்
தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு11 / 28
1காப்பு2நூல் - கலிவெண்பா3அறுமுகப்பரமன் அமர்படை வீடுகள்4பழனி மலையின் பலபெருஞ் சிறப்புக்கள்5அருண்மிகு நந்தி யாச்சிரமச்சீர்6பவவினை யொழிக்கும் சிவமலை மாண்பு7அன்பர் குழாத்தோடு அணிவரை யிவரல்8குமரன் கோயில் குலவுஞ் சிறப்பு9அபிராமி மைந்தன் அபிடேக மாடல்10தண்டபாணி கொண்ட மெய்க்கோலம்11தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு12முருகப்பெருமான் திருவுலாக் காட்சி13விசாகப்பெருமான் தசாங்கச் சிறப்பு14நீபத் தாரோன் கோபப்பிரசாதம்15அண்டர்கோன் திருவைத் தொண்டன் கண்டார்தல்16அன்பன் இன்பவநுபவம் விழைதல்17தொண்டன்தன் துயரைத் தோகைக் குரைத்தல்18ஐயனருள்வனென் றடியான் தேறல்19கலபமயிலின் பலபெயர்ப் பெருமை20ஏனைய தூதுக்கிவைவை குறையெனல்21மயிலின் தூதே வாய்ப்புடைத்தென்றல்22அண்டர்கோன் மயிலின் திண்டிறன் மாண்பு23மணிநிற மயிலின் அணிநடம் புகழ்தல்24கண்ணெழின் மயிலின் புண்ணியப் பெருமை25பணிபவர்க் கருள லணிமயிலியல்பு26நன்றிமறவேனெனத் தொண்டன் நவிலல்27தொண்டன் தன் குறைசொல்லி விடுத்தல்28வெண்பா
பழநியாண்டவர் மயில்விடுதூது · கு. நடேச கவுண்டர்

தேசமர் வேலவன் பூசனைச் சிறப்பு

✓
நிலையாய்டி கண்டு நிலமதிர ஆர்க்கும்
பலவாச் சியங்கள் பரவப் - பலவகைய
இன்னடிசில் பண்ணியங்கள் இன்கனிகள் தெங்கங்காய்
நன்மைமிகு பானீய நல்கியவை - தன்னருளாற்
கைதொட்டு நீக்கிக் கரநீவிச் செங்கனிவாய்
ஐவகைய வாசங்க ளார்ந்ததற்பின் - செய்ய
✓
திருமுகத்தின் வேர்வொற்றித் தீபநறுந் தூபம்
அருவிலைய நீறுதெளி யாடி - விரிகவிகை
சாமரை தால விருத்தஞ்சாந் தாற்றிமுத
லாமவைக ளெல்லா மமர்ந்தேற்றுத் - தோமகலும்
சந்தச் சதுர்மறையும் தன்புகழ்சொல் செந்தமிழும்
கந்த புராணக் கவிதையும் - முந்தும்
இசையும் இயமும் எதிர்முரலக் கேட்டு
வசையில் நடன மகிழ்ந்தே - இசைவாகக்
கற்பூர தீபமெதிர் கண்டு மகிழ்ந்தோர்க்கு
நற்பூதி வேண்டும்வரம் நல்கியபின் - விற்பருதி