முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
அருள்மிகு தண்டாயுதபாணி20 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

அருள்மிகு தண்டாயுதபாணி

19✓
இனிய இயற்கை எழில்குலுங்கி
இலங்கும் அலோர்ஸ்டார் நகர்தன்னில்
வணிகர் நாட்டுக் கோட்டையென
வழங்கும் நகரத் தாரமைத்த
அணிசேர் கோயில் அமர்ந்துள்ள
அருள்மிகு தண்டா யுதபாணி
பணிவாய் வணங்கும் அடியாரைப்
பரிவுடன் காப்பான் பாடுவமே!