முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
ஆறுமுகன் தோற்றம்8 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

ஆறுமுகன் தோற்றம்

7✓
வியன்மிகு ஒளிப்பொறி சிவநுதலில்
விளைந்தே ஆறாய் வந்ததனைப்
பயன்தர ஏற்று வாயுதேவன்
பக்கத் துணையாய் அக்னியுடன்
கயமெனும் சரவணந் தனிலிட்டான்
கடிதறு குழவிகள் ஆயினவாம்
நயந்தவை பார்வதி அணைத்ததனால்
நகையறு முகவன் தோன்றினனே!