முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
ஆனனம் ஆறு கொண்டவன்16 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

ஆனனம் ஆறு கொண்டவன்

15✓
வானவர் தம்மை வதைத்ததனால்
வல்லமை வாய்ந்த சூரனுடன்
கானகக் கடவுள் காங்கேயன்
கடும்போர் புரிந்து சங்கரித்தான்
ஈனமார் அசுரனை ஒழித்ததுபோல்
இசையாப் பண்புகள் நாமொழித்தே
ஆனனம் ஆறு கொண்டவனை
அனுதினம் அகமுறப் போற்றுவமே!