முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
தமிழ்த் தெய்வம் முருகன்18 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

தமிழ்த் தெய்வம் முருகன்

17✓
செந்தமிழ் தன்னைச் சங்கத்தில்
சீர்பெற ஆய்ந்த தமிழ்த்தெய்வம்
அந்தமில் முருகன் அகத்தியர்க்கே
அருந்தமிழ் உரைத்த ஆசிரியன்
கந்தனின் புராணம் கச்சியப்பர்
கலிவெண் பாவைக் குருபரனார்
சந்ததத் திருப்புகழ் அருணகிரி
சாற்றிட அருளிய தமிழ்முருகே!