முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
வாழ்த்து22 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

வாழ்த்து

✓
மண்வளம் பொழியும் அலோர்ஸ்டாரில்
மகிபன் தண்டா யுதன்என்னும்
அண்ணலெம் முருகன் அருள்வாழ்க!
அவன்தன் அடியார் நிதம்வாழ்க!
எண்ணிலா இறைபணி செய்தவராம்
ஏற்றம் மிகுந்த தனவணிகர்
நண்ணிய மலேசிய நாடிதனில்
நாளும் வாழ்க வாழியவே!