முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
அரிதாமோ அரியயனும்15 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

அரிதாமோ அரியயனும்

14✓
அரிதாமோ அரியயனும் காணாதான்
அருள்குமரா அடியார் வைப்பே
பொருளனைத்தும் தானாகி உடனாயும்
வேறாகும் பொருளே உன்றன்
அருளதனால் மாறிநின்றே மயக்கிவரும்
ஐம்புலத்தார் அடைத்து நைய
கருவறுத்தாட் கொள்வதன்றோ ரத்னகிரிக்
கோயில்கொளும் கருணைத் தேவே.