முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
இன்னமுதே என்னுளத்தின்10 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

இன்னமுதே என்னுளத்தின்

9✓
இன்னமுதே என்னுளத்தின் இருள்கடிந்து
ஞாயிறென எழுசெஞ் சோதீ
நின்றபெருங் கருணையினை நினைப்பறவே
நினைக்கின்ற நேச னாய
என்றனுக்கு நீயல்லால் வேறுதுணை
உண்டோசொல் இணையில் வேந்தே
ஒன்றும்நீ யல்லையன்றி ஒன்றில்லை
யாருன்னை உணரு வோரே.