முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
வந்தென்றன் உளம்புகுந்தே6 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

வந்தென்றன் உளம்புகுந்தே

5✓
வந்தென்றன் உளம்புகுந்தே வன்னெஞ்சக்
கல்லையணுத் துகளாய் நூறி
அந்தமிலா ஆனந்த அருள்நீரைப்
பாய்ச்சியதை அளறாச் செய்தே
பந்தவினைப் பற்றுறுக்கும் இணையடியாம்
பங்கயத்தைப் பதித்தி டாயோ
எந்தையே ரத்னகிரி வாழ்முருகா
உய்ந்திடவே ஏழை யேனே.