முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
கந்தனே காலனையும்9 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

கந்தனே காலனையும்

8✓
கந்தனே காலனையும் கழலடியாற்
காய்ந்தமுக் கண்ணன் மைந்தா
சிந்தைமிகக் குளிர்ந்திடவே மெய்ப்பொருளை
ஓதுவித்த சிவநற் கன்றே
சந்ததமும் நின்னருளைச் சாற்றுமருட்
பேறதனைத் தந்தி டாயோ
எந்தையே எழிலிரத்ன கிரிபால
முருகையா இன்பத் தேனே.