முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
உளத்திருந்தே தான்3 / 21
இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

உளத்திருந்தே தான்

2✓
உளத்திருந்தே தான் மறைந்தும் மறைக்கின்ற
மாயிருளை உன்றன் அன்பு
விளக்கதனால் விலக்குகின்ற ரத்னகிரிச்
செவ்வேளே விமலா என்றன்
உளம்புகுந்தே உன்நாமம் ஆறெழுத்தை
உணர்ந்தேத்த உணர்த்தி டாயோ
களங்கமிகு கடையனேன் கடைத்தேறச்
செய்வதென்றோ கருணை கொண்டே.