முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
இரங்கல்10 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

இரங்கல்

31நேரிசை வெண்பா✓
வண்மை மலிந்தசென்னை மாநகரில் வாழ்குகன்பால்
உண்மைசொல்லப் போன ஒருவண்(டு)என்-பெண்மைக்(கு)
இணங்கப் பகர்ந்ததுவோ? ஏய்ந்தசெச்சைத் தேன்உண்(டு)
உணங்கிக் கிடந்ததுகொல் லோ?
32மேற்படி கட்டளைக் கலித்துறை✓
ஓகோஎன் கிள்ளை வரக்காண்கி லேன்சென்னை யூர்க்குகன்பாற்
பாகோ டுறழ்தமிழ்க் கிள்ளையொன் றுண்(டு)அது பற்றியதோ
கோகோயென் றன்பொடு பேசாதென் னேனும் குளறியதோ
நாகோரம் உள்ளதன் றேசெய்யு மாறென்கொல்? நானினியே.