முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
பள்ளு-தாழிசை 14 சீர்18 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

பள்ளு-தாழிசை 14 சீர்

62✓
மெய்யே சொல்பவர்க் கிரங்கி யருளும்
வெள்ளைக் கடலின் அமுதனார்
வேரிக் கடப்பந் தாரிற் பொலிந்து
மிளிரும் செந்தமிழ் வேட்கையார்
கையேந் தியகுக் குடத்தி னார்வளம்
கமழும் சென்னையிற் காவலர்
கழனித் தொகையில் நடுகைக் கிரங்கிக்
காலம் கடத்தும் கடைசியர்
மையேந் தவர்கண் வெருட்டும் செங்கனி
வாய்வக் களையும் நிறுத்திடீர்
வளர்ந்த நாற்றின்(று) இளந்தை யாதலின்
மடங்கிக் கசங்கமி திக்கொணாது
ஐயோ உழவர் தம்மை மயக்கி
அவர்கைப் பறம்பும் அடிக்கிறீர்
அகன்று போகாமல் நெருங்கி டாதெடுத்(து)
அணிகுழம் பாமற் பதிமினே.
6எண்சீர் வண்ண விருத்தம்✓
பதியாம்உ னக்கிசைந்த நடைமன்னு வார்களே
பரலோக நட்பரென்ற முதலுண்மை தேறும்நான்
அதிமோகம் உற்றவம்பர் எனஎண்ணில் வீடுதோ(று)
அலையாதெ ழிற்சுகண்டி மிசைகண்முன் நேர்வையோ
பொதியாச லத்தொர்தொண்டன் அறிதன்மை யாளனே
புகழ்தோய தமிழ்ப்பொழிந்த கிளிநண்ணு தோளனே
நதிமாதி னைப்புனைந்த சடையண்ணல் பாலகா
நவைதீர் மலர்க்கடம்பு மலிசென்னை வேலனே.