முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
திருமகள் முன்னிலை19 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

திருமகள் முன்னிலை

64நேரிசை ஆசிரியப்பா✓
வேலைக் கலைபுனை மெல்லிய ரொடுநீ
மாலைப் பிரித்து, மனிதரிற் கடையாம்
ஈனர் தம்பால் இயைதரு கொடிதால்
வானவர் அவுணர் வன்மைக்(கு) உடைந்தாற்,
மாதவர் முதலோர் மனமிகு இடைந்தார்
வேதமா தியநூல் விதியிகப் பிறழ்ந்தன
மின்னை நேரும் விதிர்வேற் படைக்கைச்
சென்னைக் குமரன் திருப்பதத்(து) ஆணை
தொன்னீர் மையளாத் துலங்குதி இதுநின்
நன்னீர்க்(கு) ஒவ்வா நடையென அறிவாய்!
தணவரும் கருணைத் தண்மதி யொடுவெண்
புணரியிற் றோன்றும் பொருவில் பூமகளே.