முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
ஊர்8 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

ஊர்

26கட்டளைக் கலிப்பா✓
பதியில் மிக்குயர் செந்தூர், பரங்கிரி
பழனிக் குன்றம், பழமுதிர் சோலைவெற்(பு)
எதிரில் ஏரகம், மால்வரை ஆதியாய்
யாவர் கூறிடும் எம்மலைச் சாரலும்
பொதிய நாதன் முதலோர்நள் சிந்தையும்,
பூதம் ஐந்தும், புகல்வேதச் சென்னியும்,
திதித ரும்புதல் வர்க்கொரு காலனாம்
சென்னை வேலவர் சீர்திகழ் ஊர்களே.
27எழுசீர் விருத்தம்✓
ஊரும் வாகன மாய தோகையு டைக்கு கேசனை ஒப்பில்செஞ்
சீரு ளார்மலி சென்னை யிற்றிகழ் செங்கை வேலனை நம்புவார்
பாரும் வானக முந்து தித்தப தத்த ராகுவர் என்னும்நூல்
யாரும் ஓர்வரி தாயி னும்சிறி(து) என்றன் மட்டில்இ யைந்ததே.