முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
காலம் கார்காலம்16 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

காலம் கார்காலம்

54நேரிசை வெண்பா✓
வேலாயு தம்பிடித்து மிக்கபுகழ்ச் சென்னையில்வாழ்
கோலா கலச்சீர்க் குமரன்மேல்-மாலானாள்
வாடும் விதமறிந்தும் வாடைக் கனல்பரப்பி
மூடுகின்ற(து) அந்தோகொண் மூ.
55மேற்படி கட்டளைக் கலித்துறை✓
மூவர்க்கும் முன்னவன் ஈன்றசெவ் வேளை, முதிர்ந்ததமிழ்ப்
பாவற்றி டாப்புகழ்ச் சென்னைக் குகேசனைப் பார்த்தமின்னாள்
யாவர்க்கும் நன்மை தரும்கார்கண் டேங்கினள், ஈனமதன்
பூவச்சம் இவ்வண்ணம் ஆனால்என் னாம்கொல் பொழிந்திடினே.