சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
பாண்14 / 20
1காப்பு2மடக்கு3தழைச் சிறப்புரைத்தல்-தாய்கூற்று4கைக்கிளை (ஒருதலைக்காமம்) தலைவன் கூற்று5மேற்படித்துறை பாங்கனொடு பகர்தல்6ஊசல்7சம்பிரதம் (சாமர்த்தியம்)8ஊர்9மதங்கு10இரங்கல்11நெஞ்சுவிடு தூது12குறம் (குறத்தி குறிசொல்லுதல்)13மடக்கு14பாண்15கழிக்கண்வாய் புலம்பல்16காலம் கார்காலம்17பனிக்காலம் அறுசீர்18பள்ளு-தாழிசை 14 சீர்19திருமகள் முன்னிலை20நூற்பயன்
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்
பாண்
40அறுசீர்க் கழிநெடில் விருத்தம்✓
புந்தியொரு சிறிதுமின்றிப் பாண,நீ
தூதுரைக்கப் புகுந்த(து) என்கொல்
செந்தில்நக ரெனஅலைச்சீர் மருவுசென்னைப்
பதிக்குமரன் திரள்தோள் வேட்கை
உந்தியதும், குன்றியதும், அறியவல்லை
அல்லை; சொன்னேன்; உன்சொற் கொண்டோ
முந்திஅவர் இரவுபகல் வந்துவந்தென்
முலைப்போகம் முயங்கி னாரே!
41மேற்படி எண்சீர் விருத்தம்✓
நார்மலிந்த நானிருக்க அவர்பயந்த மதலையாம்
நாதன்என் கரத்திருக்க நாணமொன்றும் இன்றியே
ஏர்மலிந்த வேடமிட்டு, விழிமருட்டும் விலைமினார்
ஈனவுன் அருந்தும்வா யிதழ்ச்சுவைக்க நண்ணினார்
பேர்மலிந்த பாண!நின்னொடு என்றன்ஆவல் உள்ளதாய்ப்
பேசல்உண்மை யாகில்,என் பெருந்தவம்செய் பெற்றியே
நீர்மலிந்த வயல்குலாவு சென்னையூரின் முருகவேள்
நேயமென் னுளத்திலாத நிமிடமொன்றும் இல்லையே.
42பஃறொடை வெண்பா✓
இல்லைப் பொருளைநம்பி ஏமாந் திருப்பவர்பாற்
பல்லைத் திறக்கும்வணம் பண்ணாதே தொல்லைமறை
ஆர்க்கின்ற சென்னைமுரு கையா! அருட்கடைக்கண்
பார்க்கின்ற தாகப் பகர்ந்தாயே-நீர்க்குமிழி
அன்னவுடல் வாழ்க்கை அநித்தியமென் றன்பரெலாம்
சொன்னமொழி எண்ணித் துடிக்கின்றேன் முன்ன(ம்)நின்கைக்
கிள்ளைநான் ஆனாற் கிலேசம் பெருக்குமையல்
கொள்ளைகொள்ளை யாகவந்து கூடுவதேன் வள்ளைநெடும்
காதார் குறத்திஒரு கைப்பிரம்பு கொண்டுபல
போதார்வம் சொற்றிடலும் பொய்யாமோ நீதான்
எனையசைக்கின் றாய்எனும்சொல் ஏதமற்ற தாகில்
உனைவழுத்தல் என்றன் உரமோ, பனையுறழும்
கைக்கயத்தி லேனும் கருங்கோட்(டு) அயத்தேனும்
மிக்கமயில் வாகனத்தின் மீதேனும்-தக்கபுகழ்
வல்ல முனிவரும்பல் வானவர்கள் ஆதியராம்
எல்லவரும் சூழ எதிர்தோன்றி நல்லகனா
ஒன்றிற் கொடுத்தவரம் உள்ளபடி யேநடக்கும்
வென்றிப் பெருக்கம் மிகக்காட்டித் தென்றற்கோன்
வேதனங் கன்னன்பார் வீறாப் பணுகாத
போதுநுய மாகப் புரி.
43கலிநிலை, வண்ணக்கறை✓
புரிகொண்ட இருகொம்பு திகழ்கின்ற
தகர்கொண்ட புகழெண்ணுவேன்
எரியின்கண் மெழுகென்று தளர் துன்பம்
அறவந்தென் எதிர்மன்னுவாய்
வரிவண்டு மதுமுண்ட பலதந்தி
தெருவெங்கும் வருசென்னையூர்
கிரிநெஞ்சு புகழொன்ற நடனஞ்செய்(து)
உயர்வென்றி கிளர்மன்னனே.
44குறளடி வஞ்சிப்பா✓
மன்னவர்முதற் பொன்னுடையயர்
தம்மெதிர்தினம் எம்மதுமனம்
ஒல்குறுந்துயர் நல்குபுன்மயல்
ஆவதும்உன தேவலதெனில்
அல்லதுமறைச் செல்வருள்நிறை(வு)
என்கைமெய்ப்படா நின்கழற்
பேசவாயிலன் நாசமில்புகழ்
மரீஇயசென்னையம் பதியிற்சிறந்து
தன்னைநாடினர்க்குத் தருமுருகேசனே.
45நேரிசை வெண்பா✓
முருகார் கடம்பணிவான் மும்மூர்த்தி கட்கும்
அருகாய் அவராய் அலன்ஆம்-பெருகாண்மைச்
சேந்தனெழிற் சென்னைநகர்ச் செவ்வேள், அவன்றிருத்தாள்
மாந்தருக்கும் எய்து வது.
46கட்டளைக் கலித்துறை✓
வதுவைப் பருவம்வந் தெய்தியும் வாடும் வனிதையெனப்
பொதுவைக் கருதியும் பேறடை யாது புழுங்குகின்றேன்
விதுவைப் புனையும் சடையார்மைந் தா!வெற்றி வேல்பிடித்து
மதுவைப் பொழியுங் கடம்பணிந் தாய்சென்னை வாழ்கந்தனே.
47அறுசீர்க்கழி நெடில் ஆசிரிய விருத்தம்✓
வாழுமறை முடிவுணர்ந்தா ரனையசிலர்
நிர்க்குணம்நின் வடிவம் என்பார்
ஆழும்அறி வினர்க்கும்எட்டாய் எனச்சொல்வார்
நான்துணிவுற்(று) ஐயு றாமல்
ஏழுபிறப் பினுந்தடுத்தாள் பவன்என்பேன்
தளர்நடைச்சேய் என்றும் சொல்வேன்
காழுறுமா மரம்பிளந்த வடிவேலா
சென்னைநகர்க் கந்த வேளே.
48எழுசீர் விருத்தம்✓
வேள்படைப் பொலிவும், குளங்களும், வயலும்
வீதியும், ஆதியை விரித்து
நாள்படக் கவிசொற் றலைவுறா துனையே
நவிலுமெய்த் தொழும்பரிற் கூட்டாய்!
காள்படு குதிரைத் தலைப்பெரும் பேயாற்
கலங்கிநின் றிறைஞ்சினன் றனையும்
ஆள்பரம் பொருளே அசலமுற் றுடையாய்!
அவிர்புகழ்ச் சென்னைவே லவனே.
49எண்சீர்க்கழி நெடில்✓
அவலமதி தீர்ந்தபல பெரியோர் தாமும்
அகம்புறம்ஒன் றெனத்துணிவுற்(று) அறைத லாலென்
தவமுதிர்ந்திட் டாலும்இல்லா விடினும் தோகைத்
தனிப்பரிமேற் றிருச்சேவை தரத்தான் வேண்டும்
கவளமத கரிமுகவற்(கு) இளைய பாலா
கார்த்திகைப்பெண் ணார்வளர்த்த கந்தா! எங்கள்
சிவகுருதே சிகமுருகா! பொன்னூர் போலும்
சென்னைநகர்க் கோவிலில்வாழ் செயச்செவ் வேளே.
50எண்சீர் வண்ண விருத்தம்✓
செவ்வரிகள் துன்னும்விழி மங்கையர்க ளாலே
தெள்ளியவர் தம்மையிகழ் கின்றசில தீயோர்
பௌவம்நிகர் புன்மையிலஅ மிழ்ந்துமடி வேனோ
பையரவை உண்ணுமயி லின்கண்நனி வாராய்
அவ்வவர்தம் எண்ணமென நின்றகும ரேசா!
ஐயமறு சண்முகஅ மைந்தகுரு நாதா!
தெவ்வுருயிர் விண்ணில்உற வென்றவடி வேலா!
செல்வமிகு சென்னையில்ந டஞ்செய்முரு கோனே!