முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
கைக்கிளை (ஒருதலைக்காமம்) தலைவன் கூற்று4 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

கைக்கிளை (ஒருதலைக்காமம்) தலைவன் கூற்று

12வேற்றொலி வெண்டுறை✓
செல்வியினும் சீருடையாள் திருக்கடைக்கண்
நோக்கம்ஒரு சிறிதென் மீது
புல்வதன்முன் இந்தவண்ணம் பூமாரி
பொழியுமதன், புலவிப் போதில்
கொல்வதோர் அருமையோ? குமரன் சென்னையில்
கல்வியே வடிவமாக் கவின்ற மக்களே.