முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
குறம் (குறத்தி குறிசொல்லுதல்)12 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

குறம் (குறத்தி குறிசொல்லுதல்)

34கட்டுத் தாழிசை. ஈற்றுச்சீர் எதுகை✓
வருகறியும் செல்குறியும் உளகுறியும் சொல்வேன்
வாதுகொண்டு பகைத்தவரை வாயடியால் வெல்வேன்
அருகுசொன்ன கௌளியது நன்னிமித்தம் பாராய்
ஐந்துநெற்கை ஒன்றியதென் ஆசைமுற்றும் தாராய்
திருமருவும் சென்னைநகர்க் குமரனையே சேர்வாய்
தியக்கமுற்றும் நீங்கியினித் தினமுமகிழ் கூர்வாய்
மருமலர்க்கை ரேகையிது வம்பாமோ மானே!
வளம்பெருகுந் தென்பொதியை மலைக்குறத்தி நானே.
35மேற்படி குறுந்தாழிசை✓
நானுரைக் கின்றசொற் கேளாய் நற்றமிழ்চ্ சென்னைவி சாகன்
தானுனைச் சேர்வன்வந் தின்றே சத்தியம் என்குறி கண்டாய்!
ஏனுனக் கின்னமும் ஐயம் எண்ணெயும் கஞ்சியும் பெய்து
வேணுறு தானையும் நல்காய் மெல்லியற் செந்தகை மின்னே.