முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
கழிக்கண்வாய் புலம்பல்15 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

கழிக்கண்வாய் புலம்பல்

5112 சீர்த்தாழிசை✓
முருகு விரியும் மலர்த்துணரும் முத்து விளையும் எடுத்தெறிந்து,
முழங்கிச் சிறிதும் துயிலாமல், முழுதும் பசுமைப் பொலிவெய்தி
அருகு வருவார் களைவெருட்டி, அலையச் சலியாது, எந்நேரம்
அம்கட் புனல்மிக் கிறைத்து,மதி யதன்முற் கொதிக்கும் அணிக்கடலே
குருகு முழங்கும் பொழிற்சென்னைக் குகனை, எனது மகள்போல்நீ அலதெனைப்போற்
கோலா கலச்சீர்ப் பவனியினிற் கும்பிட் டனையோ
பெருகும் உனையீன் றுள்ளாளும் பேரில் லவளாய், மலடிருந்து
பிரிய விரதம் பலஇருந்து பெற்றாள் கொல்லோ? பேசுதியே!
52மேற்படி எண்சீர் மடக்கு✓
பேசுகின்ற மாதருக்கு மறவாத வலரே
பிறங்குமதன் மாதருக்கு மறவாத வலரே
மாசுபடல் புன்னையிடைக் கலைகையணி வண்டே
வளியசைக்கும் புன்னையிடைக் கலைகையணி வண்டே
கூசுகின்ற நாவாய்மேல் வருந்திருக்கை யினமே
குத்துவென நாவாய்மேல் வருந்திருக்கை யினமே
தேசுகொடைக் கந்தர்முற்றும் சேரவிரங் காரே
சென்னைநகர்க் கந்தர்முற்றும் சேரவிரங் காரே.
53அறுசீர் வண்ணவிருத்தம்✓
காரணமெ னச்சொன்ன வாய்மையார்
காலமழி வற்றின்னல் ஈயுமேல்
நாரணன்மு தற்றுன்னு தேவர்தாம்
நாளும்உனை மெச்சுண்மை நீடுமோ?
பூரணப தத்தண்ணல் பாலதா!
பூதரமு கட்டண்ணும் ஆடலாய்
ஆரணன்அ ழப்பண்ணு தேசிகா
ஆசுறுத மிழ்ச்சென்னை வேலனே.