முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
மதங்கு9 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

மதங்கு

28எண்சீர் விருத்தம்✓
இயம்புகின்ற சாதிகட்குள் உயர்ந்த தாகும்
எங்கள்குலம், இந்தவிதம் இகத்தோர் தேரார்,
அயன்புதல்வர் தம்மில்அந்த வசிட்டன் மட்டும்
அறிந்துள்ளான்; தமிழ்வேதம் அறைந்தோன் றன்னைப்
பயந்தவள்யார்? கேட்டதுண்டோ, மதங்கி நாமம்
பார்ப்பதியும் புனைந்துகொண்டாள், பழிக்க வேண்டாம்
செயங்கமழும் சென்னைநகர்க் குகன்அன் பில்லார்
சிறந்தகுலத் துதித்தாலும் தீயோர் தாமே.
29சந்தக்கவி 8 சீர்✓
தாம டைந்தஅருள் வண்மைகொ டுலகோர்
தாழ்வொ ழிந்தளவில் நன்னலம் உறுவே
மாம டந்தைகண வன்முத லினர்தோய்
வாழ்வை யுஞ்சிறுமை என்னுமெ யுணர்வோர்
நேமம் வென்றிதிகழ் பன்னிரு புயமேல்
நீப முங்குரவும் அண்ணிய முருகோன்
நாமம் நம்பியுயர் சென்னையி னிடைபோய்
நாடொ றுந்துதிசெய்(து) உன்னிடும் நிலையே.
3014 சீர் வண்ணவிருத்தம்✓
நிலையில் நிற்பதும், அதுபி றழ்ச்சிபடும்
நெறியி னிற்செலலும் எண்ணொணா
நிதிவி ளைத்திடலும் மிகுந ளர்ச்சி கொடும்
நிதமி ரப்பதுவும் விண்ணுளார்
தலைமை பெற்றிடினும் உயிர்வ தைத்திடுதல்
தவறெ னச்சொலலும்-அன்னவூர்
தனில்இ ருக்குமட மகளிர் இச்சைகொடு
தழல்வ ளர்த்திடலும், இன்னதே(வு)
அலைக டற்புவியில் உயர்வெ னக்கொளலும்
அவர வர்க்கும் அவர்-எண்ணமூட்(டு)
அவிர்வ தொப்பில்பரம் எனலும், மற்றும்இவை
அனைய பற்பலவும் உன்னினால்
மலைவில் உத்தமர்கள் குடியி ருக்கும்எ ழில்
மருவும் நற்புகழ்கொள்-சென்னையாம்
வளந கர்க்கிடைஓர் மயிலி னிற்பவனி
வருமொ ருத்தனருள்-வண்மையே.