முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
மடக்கு13 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

மடக்கு

36கொச்சகக் கலிப்பா✓
மின்னல்நிகர் வேலானே வினையில்விட வேலானே
பொன்னவிர்பல் பணியானே புலைத்தொழிலிற் பணியானே
கன்னல்வில்லிக் கிளையானே கரிமுகவற் கிளையானே
சென்னைநகர்க் குடையானே திறல்அவுணர்க் குடையானே.
37அடிமடக்கு-கட்டளைக் கலிப்பா✓
ஆனை யானனத் தன்றுணைக் கந்தனே
ஆனை யானனத் தன்றுணைக் கந்தனே
கான வேதனை யுஞ்செயும் வேடனே
கான வேதனை யுஞ்செயும் வேடனே
சேனை வீரக் கணம்பயில் வாகனனே
சேனை வீரக் கணம்பயில் வாகனனே
மானச் சென்னைப் பதிக்கணி நாதனே
மானச் சென்னைப் பதிக்கணி நாதனே.
38நேரிசை வெண்பா✓
நாதாந்த மோனம் நவிலுங் குருநாதன்
வேதாந்த ஞானம் விளக்குவோன் - போதாந்தம்
தன்னை யுணரும் தவத்தோர் புகழ்போலும்
சென்னைநகர்க் கோயில்வாழ் சேய்.
39கட்டளைக் கலித்துறை✓
சேய வதனங்கள் ஆறுடை யான்,திருச் சென்னைப்பிரான்
மாய வதனம்பு வார்க்கெளி யான்,சொன்ன வார்த்தையென்னும்
தூய வதனநு பூதியெய் தாமுனம் தூர்த்தரிடம்
போய வதனம் இரந்தலைந் தேன்,என்புன் புந்திகொண்டே.