முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
சம்பிரதம் (சாமர்த்தியம்)7 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

சம்பிரதம் (சாமர்த்தியம்)

23இரட்டை ஆசிரிய விருத்தம்✓
போனகமெ னக்குளத் தொடுகடலை யுண்ணலாம்
பொன்வெள்ளி உலக மெங்கும்
பொலிவுற விளக்கலாம், மலைபல சுமக்கின்ற
பூதத்தின் மேற்றி றியலாம்
வானகமும் வைகுந்த மும்கையிற் காட்டலாம்
மந்திரத்து அளவறி யலாம்
மையலிற் பல்லுயிரும் வசமற்று விழுமாறு
வருவிக்கலாம் இதெல்லாம்
கானகக் குறவள்ளி மேவரனைச் சென்னையில்
கவினுறும் கந்த வேளைக்
கருதாத சிலருக்கும் எளிதாய விதமெனக்
கவிவாணர் கண்டுகொள்வார்
ஊனகடுறத் தின்கை மனிதருக் கில்லையெனும்
ஒருவிரதம் நிலைநிறுத்தி
உள்ளநெறி ஆறினுக் கும்பொதுவ னாய்முத்தி
உறுமாறு முயலுவோமே.
24நேரிசை வெண்பா✓
முயலகனைச் சென்னியின்மேல், முண்டகத்தாட் கீழ்வைத்(து)
இயலுநடம் ஆடும் இறைவன்-மயலுடையாட்(கு)
ஈந்துகுகன், சென்னைநகர்க்(கு) என்னைமகிழ் விக்கும்வண்ணம்
போந்துமனம் சொல்வதுண்டோ பொய்?
25கட்டளைக் கலித்துறை✓
பொய்யடி யார்க்கும் பணிசெய்தல் வேண்டிப் புலருமென்னை
மெய்யடி யார்களிற் சேர்த்தால் இழிவுன்னை மேவுங்கொலோ
ஐயடி கட்கருள் செய்தார் உதவும் அறுமுகவா!
பையடித் தோகை மயிலாடும் சென்னைப் பதிக்குகனே.