முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
நெஞ்சுவிடு தூது11 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

நெஞ்சுவிடு தூது

33எண்சீர்த் தாழிசை✓
இனியமாதர் தம்மையேவி யேவிநெஞ்(சு)இ டைந்ததால்
யான்வளர்த்த கிளியொ(டு) அன்னம் எனுமவற்றை விட்டபின்
தனியளாகி, விண்ணிலேகும் நாரையோடும் முகிலொடும்
சாற்றினேன், எனக்கிசைந்த சரதமொன்றும் வினவிலேன்
பனிமலர்க்க டம்பணிந்து சென்னையூரில் வைகும்வேள்
பட்சம்வைத்தி டான்னனப் பகர்ந்திடற்கும் அஞ்சினேன்;
கனியும்அன்பொ டுள்ளநெஞ்சம்! உன்னையன்றி மற்றையோர்
காதல்கூற வல்லரல்லர் கடிதில்ஏகி வருதியே.