முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
ஊசல்6 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

ஊசல்

18எண்சீர்க் கழிநெடில் விருத்தம்✓
வாளரிக்கண் விழிமடவார் இன்பம் ஓர்கால்
மறுத்தீர்ந்த மெய்ஞ்ஞான வாழ்க்கை ஓர்கால்
கோளகன்ற சமரசநன் னிலைமேல் விட்டம்
குலமறைவாக் கியங்களெனக் கூறும் நான்கும்
நீளவடம், பிரணவம்பொற் பலகை யாக
நிசமெனும்வேல் ஏந்தியிருந்(து) ஆடீர் ஊசல்
தேளனையர்க்(கு) எமன்போல்வார் துதிக்கும் சீர்சால்
சென்னைநகர்க் கந்தர்இனி(து) ஆடீர் ஊசல்.
19இரங்கல் - கலிநிலைத்துறை✓
கந்த மலர்க்கூ தளம்அணி வானைக், கதிர்வேற்கை
அந்தண னைச்சென் னைப்பதி யிற்கண் டதனாலே
இந்தவி தத்துன் பெய்தினாள், என்மா(று) இனியேனும்
வந்தணை யானேல் அங்கசன் அம்பால் மடிவாளே.
20கலிவிருத்தம்✓
சல்லா பவினோ தனெனத் தமிழிற்
சொல்லார் துதியும் துதையப் படுமோ
நல்லார் புகழ்சென் னைநகர்க் குகனே
வில்லார் தனிவேல் புனைதோள் நிறையே.
21எண்சீர் விருத்தம்✓
நிரைகொள் வாரெதிர் பொருதபார்த் தனையே
நேரொர் வீரன்இந் நீள்நிலத் தெய்தி
அரையன் ஆதியர் பிழைமுயன் றாலும்
அடக்கும் நாள்வரின் அல்லதுன் ஆணை
பவரையும் ஈசனும் மலர்விழிக் கணியும்
பதம்தந் தாலும்என் பாழ்மனம் இசையா(து)
இரையும் வார்கடற் றொளிமிகும் சென்னை
யிடத்தில் வேல்பிடித் திலங்கும்எம் பரனே.
22மடக்கு அறுசீர்✓
பரவைவிழிப் பரவைகொண்கற் குந்தையளிக்
குந்தயையென் பாங்கிற் செய்து
கரவினருக் கரவில்நிகழ் தருமாறும்
தருமாறு கருது கின்றேன்
குரவமலர்க் குரவ விண்ணூர்க் குஞ்சரியாற்
குஞ்சரியாய்க் குறப்பெண் கொண்டாய்
இரவலருக்(கு) இரவலனச் சென்னையின்நாள்
சென்னையில்வைத்(து) இயல்கேட் போனே.