முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
காப்பு1 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

காப்பு

1எண்சீர் வண்ண விருத்தம்✓
சித்த ருக்கிசையும் உண்மைப் பொருளே
சிக்கி டப்பெரிதும் நண்ணிக் கொளலால்
இத்த ரைக்குள்உனை உன்னித் தொழும்நான்
எய்த்தி டச்செயல்நின் வண்மைக் கழகோ
முத்த மிழ்க்கினிய தென்னப் பகர்வாய்
முற்றும் இப்பொழுது விண்உற் றதுவோ
சுத்த தத்துவமென் மெய்ம்மைப் பொருளே
சொர்க்கம் ஒத்திலகு சென்னைக் குகனே.
2பதின்சீர் வண்ண விருத்தம்\✓
குகனைநம் பித்தொழற் கெண்ணி மதம்அனந் தத்தினிற் றுன்னி
குரவர்புன் சொற்கள்கற் றின்னல் மன்னு றாதே
அகம்நிறைந் திட்டமெய்த் தன்மை மருவியுஞ் சொற்பனத் தென்னுள்
அவன்விளங் குற்று(ம்),முற் கன்ம-வன்மை தீரா(து)
இகழும்வஞ் சத்தர்கைப் பொன்னில்-விழைவும்வன் கழ்கிணற் றிங்ஙன்
இடைதலுந் தூற்றிடப் பண்ணல்-உன்னி டாதோ
சகளவிம் பத்தில்நட் பின்மை-நிகழும்வம் பர்ச்செகுத் துஅம்மை
தவிர்நலங் கைக்கொளிற் பன்னு-சென்னை யூரே.
3மருடபா✓
சென்னைப் பதியில் திருக்கைவேல் ஏந்திநிற்போன்
தன்னைக் கருதவொட்டாச் சஞ்சலமே-உன்னை
இகலென உணரா(து) ஏற்ற நெஞ்சில்
பகலுறழ் திருவருட் பான்மை
புகவரின் எங்கு போவாய் நீயே.
4கலிவிருத்தம்✓
நீய லாதொரு கடவுளர் உளரென நினையேன்
ஏய நின்னருட் பெருக்கிலொர் சிறிதளித் தெனைஆள்
மாயன் அன்னவர் பலர்வளர் சென்னைமா நகரில்
சேய வேல்கொடு தினந்தினம் நிலவுதே சிகனே.