முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
அடிமலர் விழுந்த13 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

அடிமலர் விழுந்த

53நேரிசை ஆசிரியப்பா✓
அடிமலர் விழுந்த அன்புடன் பண்டு
படிதனில் போற்றிய பராசரன் மக்கட்
கொன்றே யான வோங்கா ரத்தின்
துன்னிய பொருளை நன்னய மாகவும்
இரண்டறக் கலத்த லின்ன தென்பதையும்
முரணுடை மூன்றை யடக்கு முறையும்
நான்மறைப் பகரும் வான்பொரு ளனைத்தையும்
ஐந்தவித் தாரது சிந்தையிற் றன்மையும்
ஆறா தாரத் தற்புத நிலையும்
ஏழா வரண மியல்பினை யனைத்தும்
எண்குணத் தீச னேற்றமா தியையும்
பரிவுடன் விரித்துப் பகர்ந்தருள் செய்தவுன்
குரைகழ லேத்துமிக் கொடியனுக் கருளாய்
இழுமென அருவி யிழிதரும்
பழமுதிர் சோலை மலைவரு வோனே.
54எண்சீராசிரிய விருத்தம்✓
ஏகமுதற் பொருளாகி யின்ப மாகி
என்றைக்கு முளதாகி யில்லா தாகி
தாகமுடை யார்க்கருளின் வாரி யாகி
தரணிதனி லன்பர்கணம் உய்ய வேண்டி
மேகமுழக் கதுபோல வியங்க ளார்க்கும்
வியனருணைக் கோபுரத்துள் விளங்கும் கோவே
தேகமதை யானென்றே கருது வேற்குன்
திருவடியி லிடமுண்டோ அறிகிலேனே.
55சந்த விருத்தம்✓
அறுமுக வொருவனை யனுதின முறையொடு நறையவி முலர்தூவி
உறுபத மடைகுவர் புகழொடு அவரவர் தொழிலையு முயர்வோடே
குறுமுனி மலரயன் கலைமகள் மரைவரு திருமகள் குடமாடி
செறுநரை யழிதரு படையுடை சுரபதி சசிமகள் செயமாதே.
56நேரிசை வெண்பா✓
தேங்கமழுஞ் சோலைத் திருவே ரகத்தினிடை
பாங்குடனே வீற்றிருக்கும் பண்ணவா-தீங்கிலன்பர்
வெஞ்சாத நீறாக்கி மேன்மைகொளு நின்னாற்றல்
அஞ்சாத நாயேற் கருள்.
57கட்டளைக் கலித்துறை✓
அஞ்சக் கரத்தன் மலர்கொண்டு பத்தியி லஞ்சலிசெய்
அஞ்சக் கரத்தற் குருவாகி யீரே ழவனிபடை
அஞ்சக் கரத்தன் தொழில்செய்த கந்த னருளிருந்தால்
அஞ்சக் கரத்தன் படரஞ்ச மும்மை யணைவதற்கே.