முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
குன்றுகள் செறியுங்17 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

குன்றுகள் செறியுங்

73நேரிசை ஆசிரியப்பா✓
குன்றுகள் செறியுங் குறிஞ்சி வாழ்நருங்
குன்றினை யெடுத்த கொண்டல் வண்ணனுங்
குன்றினைத் தடிந்த குலிச பாணியும்,
குன்றுபக யெறிந்த வன்றிறல் வேலோய்!
மருகனென் றழைக்க வந்தருள் புரிந்தனை;
கருங்கட முமிழும் கரிநல் யானைகள்
கிழங்ககழ் குழியில் விழுந்தெழ வொண்ணா
தலமருந் துழல்வதை யுஞ்சுகங் காணா
மலைநெலைக் கொணர்ந்து வல்லையிற் பரப்பியக்
குஞ்சரம் புரந்து குறிஞ்சி பாடுஞ்
செஞ்சொலுக் குவந்து செம்மாந் திருக்குந்
தணிகா சலத்தன் தண்ணடி
அணியாக் கொள்ளுது மஞரொழி பொருட்டே.
74எழுசீராசிரிய விருத்தம்✓
பொருளினைக் கருதியு னடியிணை மறந்து
பொன்னணங் கனையா ரின்ப
மருள்விழிக் கிலக்காய் வாடுறுந் தமியனை
மறலியென் செயுமோ வறியேன்,
திருந்திய வின்சொல் மிகுநிறைந் தெழில்கொள்
தேவருங் கற்பதற் கவாவும்
அருந்தமி ழதனைக் குறுமுனிக் கோதிய
கந்தனே யெந்தைநா யகனே.
75சந்த விருத்தம்✓
ஏறுமயி லைக்கடவி வானிலம னைத்துமொரு
ஏசலிற்க ணத்து வருவோன்
நீறுபட யெற்றிபொரு சூரரைய டர்த்துசய
நீள்கொடியெ டுத்து புவியி
லீறுமுத லற்றதிரு வேரகத்த லத்துவரு
மீசனென சற்று முணரார்
மாறுகொள்ம னத்தைநனி தீநெறிசெ லுத்திமல
மாழ்நரகு நச்சு பவரே.
76நேரிசை வெண்பா✓
நச்சம்பு வேல்விழியார் நட்புக்கோட் பட்டேனை
இச்சகத்தி லுய்விக்க எண்ணுமோ-பச்சை
கயிலா சனத்தர் களிப்படைய வந்த
மயிலா சனத்தர் மனம்.
77கட்டளைக் கலித்துறை✓
மனத்தை யடங்கிலென் வாயுவைக் கட்டிலென் மாண்புடையோ
ரினத்தை யடையிலென் எண்சித்தி கற்று மெனிவ்வுலகில்
புனத்திற் றினைக்கவர் புள்ளினை யோட்டுமென் பூங்கொடியாம்
அனத்தை மணந்தவற் கேதலை யன்பரா காதவரே.