முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
பார்மிசை யதனிற்3 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

பார்மிசை யதனிற்

3நேரிசை ஆசிரியப்பா✓
பார்மிசை யதனிற் கார்மிசைத் தோன்றும்
மின்னென விளங்கும் பொன்னணங் கனையார்
தண்டலை யின்கண் வண்டலைப் பயிலும்
ஆன்றோர் மனமென வாலந் துலங்கும்
மலர்செறி வாவியில் மடவனந் துஞ்ச
அலகுடை சேவ லண்மையி லிருந்து
சிறகரைப் பரப்பிச் சிவிறியைக் கடுப்ப
இளங்கால் வீசும் வளங்கொள் தணிகையை
இடங்கொண் டிருக்கு மிமையவர் பெரும!
நின்னைத் தொழுஉம் நின்னடி யார்க்கு
இல்லை பிறப்பென என்றே விளிக்கும்
வாரணக் கொடியாய்! ஆரணக் குருவே!
முத்தி யளிக்கும் முத்தமிழ்ப் புலவா!
பத்தர்க் கருளும் பன்னிரு விழியாய்
உன்பெருஞ் சீர்த்தியை உவப்புடன் புலவர்
உச்சிமேற் கொள்ளும் ஒருபெரு
கச்சியப்ப னேநன்கு கழறவல் லானே.
4அறுசீராசிரிய விருத்தம்✓
வல்லிய மெனுவெஞ் சீயம் மாடுறு முழையிற் றாவ
ஒல்லையிற் கவியி னீட்டம் ஓடியே மரத்தி லேற
கல்லென அருவி வீழுங் கவினொளிர் திருச்செங் கோட்டை
இல்லெனக் கொண்டு வாழு மீறிலா யெந்தன் வாழ்வே.
5சந்த விருத்தம்✓
வேதமுடன்பல வாயசுருதிக ளியாவு
முழுதறி வேதனும்
சீதமுறுபுன மீதுவளர்வன மாலைத்
திகழ்திரு நாதனும்
காதலொடுவுனை நாளுந்தொழுதிடுங் காவி
செறிவயல் மீதிலே
நாதமிகுதரு நாகினினந்திரி சீறு
மலையொலி வாயனே.
6நேரிசை வெண்பா✓
வாயுரை நிற்காமுன் வண்ணமுகம் வாடாமுன்
தேயுகக்குங் கண்ணரும்மைத் தேடாமுன்-சேய
திருவாவி னன்குடிவாழ் சீர்வரைசே ரையன்
திருவாவி னன்குடியைச் செப்பு.
7கட்டளைக் கலித்துறை✓
செப்பை நிகர்த்தநற் சேக்கையா ரன்பினைத் தேடிச்சென்று
இப்பெரும் பாரி லிழுக்குற வாழு மியல்புடையீர்!
துப்புறழ் மேனிக் கடம்பவிழ் மார்புடைத் தூயனது
ஒப்புமை யில்லாப் பெருஞ்சீர்க் கழல்போற்றி உய்யுமினே.