முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
கேகயப் புள்ளுங்20 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

கேகயப் புள்ளுங்

88நேரிசை ஆசிரியப்பா✓
கேகயப் புள்ளுங் கேழ்மணிக் கோழியும்
பைங்கா லன்னமுஞ் செங்கால் நாரையுஞ்
சென்னிறக் கோணப் பொன்னெழிற் கிளியுந்
தாரா வீட்டமும் போதா கோட்டமும்
புறவப் பேடும் பூஞ்சிறைக் காடையும்
விதவித மாக மிக்கொலி யெழுப்பல்
சதவித மாகிய தக்கைக தடாரி
சல்லரி தூரியந் தண்ணுமை திமிலை
கல்லொலி பம்பை கண்ணுறு பேரிகை
இன்னண மியங்க ளியம்புதல் மானும்
சோலை தடஞ்செறி சோலை மலையாய்!
பன்னருஞ் செய்கை பலப்பல மல்கும்
நின்சீர் கேட்டும் நெஞ்சுநெக் குருகா
வன்மன மாக்களை மண்ணில்
என்செயப் படைத்தா னெண்கண்ணன் தானே.
89எழுசீராசிரிய விருத்தம்✓
தானவர் தடிந்த வடிவுடை சத்தியா
லாணவக் காட்டினை யெறிந்து
ஊனமில் பத்தி வித்திட யடியே
னுளப்பணை திருத்துநா ளுளதோ
கூன்லம் பிறைக ளிரண்டெனத் திகழுங்
கோட்டுடை மதகரி யினத்தை
வானென மருண்டு மயிலின மாடுந்
தடவரை மேவுமா மணியே.
90சந்த விருத்தம்✓
மருவார்க ளஞ்சு மயில்சேரு மத்தர்
மழுதூல மேந்து மிறையின்
குருவாகி வந்த வொருஞான மூர்த்தி
குடியாக வாழு மடியார்
கருவா யுழன்று மலபாச முற்று
கலிசூழ மிந்த படியில்
வருவார்க ளல்ல ரிதுவுண்மை தெய்வ
மறையேயி தற்குக் கரியே.
91நேரிசை வெண்பா✓
கருதரிய நின்மனுவைக் காசினியி லன்போ
டுருகிமன மெந்நாளு மோத-அருளுடனே
நின்னவா வேண்டி யிருப்பேற்கு நீலமயில்
மன்னவா தாராய் வரம்.
92கட்டளைக் கலித்துறை✓
வரனே யளிக்கு மணியே குறிஞ்சி மலைவருசிற்
பரனே மதுவழி யுஞ்செங் கமலம்ேபாற் பன்னிரண்டு
கரனேநின் றாளே சரணஞ் சரணங் கடனிறச்சீ
தரனே மகிழுந் தணிகா சலத்துநற் சண்முகனே.